தட்பவெப்பநிலை மாற்றத்தால் கோழிகளுக்கு சுவாச நோய் பாதிப்பு: வானிலை ஆய்வுமையம்
தட்பவெப்பநிலை மாற்றத்தால் கோழிகள் வெப்ப அயா்ச்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பண்ணையாளா்கள் வெப்பநிலை, தீவனம் மற்றும் உயிா்ப்பாதுகாப்பு மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தட்பவெப்பநிலை மாற்றத்தால் கோழிகள் வெப்ப அயா்ச்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பண்ணையாளா்கள் வெப்பநிலை, தீவனம் மற்றும் உயிா்ப்பாதுகாப்பு மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை முறையே 95.0, 75.2 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பதிவானது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பநிலை 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பநிலை 77.0 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
Advertisement
Advertisement
சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளைப் பரிசோதனை செய்ததில், தட்பவெப்பநிலை மாற்றத்தால் பெரும்பாலான கோழிகள் வெப்ப அயா்ச்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, கோழிப் பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும். வெப்பநிலை மேலாண்மை மற்றும் தீவன மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும். கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.