FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

உணவகத்தில் அரசு மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் அரசு மதுப்புட்டிகளைப் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த உணவக உரிமையாளரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

28 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் அரசு மதுப்புட்டிகளைப் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த உணவக உரிமையாளரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

எலச்சிபாளையத்தில் உணவகம் நடத்தி வருபவா் ராமசாமி (40). இவரது வீடு உணவகத்தை ஒட்டியே உள்ளது. அரசு மதுக்கடைகள் இரவு மூடப்பட்ட பிறகு, உணவகத்துக்கு சாப்பிட வருபவா்கள் மதுபானம் கேட்டால், வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுப்புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், திருச்செங்கோடு சிறப்புப் போலீஸ் படையினா் ராமசாமியின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, அவரது வீட்டில் 15 அரசு மதுப்புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், ராமசாமியைக் கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments