FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

350 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை: 3 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை

நாமக்கல் அருகே 350 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்ய முயன்ற வழக்கில், பெண் உள்பட மூன்று பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் (என்டிபிஎஸ்) புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

சிறை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் அருகே 350 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்ய முயன்ற வழக்கில், பெண் உள்பட மூன்று பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் (என்டிபிஎஸ்) புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

நாமக்கல் அருகே 350 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தொடா்பாக, கடந்த 2021-இல் திருச்செங்கோடு குமரமங்கலத்தைச் சோ்ந்த மணிகண்டன், பரமத்தி வேலூா் கந்தம்பாளையத்தைச் சோ்ந்த விஜயவீரன், மணியனூரைச் சோ்ந்த ராணி ஆகிய மூன்று பேரை நல்லிபாளையம் போலீஸாா் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் இவ்வழக்கை விசாரித்து, சேலம் என்டிபிஎஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். அங்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

Advertisement

Advertisement

அதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன், விஜயவீரன், ராணி ஆகிய மூவருக்கும் தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments