பிளஸ் 2 மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்
திருமங்கலத்தில் பிளஸ் 2 மாணவிக்கு புதன்கிழமை நடக்க இருந்த திருமணத்தை மகளிர் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
திருமங்கலத்தில் பிளஸ் 2 மாணவிக்கு புதன்கிழமை நடக்க இருந்த திருமணத்தை மகளிர் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற இருப்பதாக சமூக நலத்துறை அலுவலருக்கு தகவல் கிடைத்ததாம்.
இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று, பிளஸ் 2 மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் 18 வயது நிரம்பிய பின்னர்தான் திருமணம் நடத்தி வைப்போம் என பெண் வீட்டாரிடம் எழுதி வாங்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.