FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விதிமீறல்: பல்கலை. உறுப்புக் கல்லூரி பணியாளர்களை நீக்க நடவடிக்கை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக திருமங்கலம் உறுப்புக் கல்லூரியில் விதியை மீறி நியமிக்கப்பட்ட தற்காலிக

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக திருமங்கலம் உறுப்புக் கல்லூரியில் விதியை மீறி நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 3 பேரை பணியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 மதுரை திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், பல்கலை. ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியின்றி 8 பேர் தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.  இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு, பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள பேராசிரியர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, பல்கலைக்கழக 
செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.அறிவழகன், புதன்கிழமை விசாரணை மேற்கொண்டார். இதில், உதவியாளர்கள், மார்க்கர்கள், தட்டச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே துணைவேந்தர் குழு தேர்வு செய்து பணியில் நியமித்த ஆணை இருப்பதாக சம்பந்தப்பட்டோர் கூறினர். இருப்பினும், பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியின்றி யாரும் பணியில் சேரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments