பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் மணிக் கதவுகள் திறப்பு!
கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலின் மணிக் கதவுகள் திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றதைப் பற்றி...
கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலின் மணிக் கதவுகள் திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆடி மாத பௌர்ணமி நட்சத்திர நாளில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடைபெறக் கூடிய இந்த நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
கோயிலின் மணிக் கதவுகளுக்கு ஐதீக முறைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கதவு திறக்கப்பட்டது. அப்போது, பதினெட்டுப் படிகளிலும் கற்பூரம் ஏற்றப்பட்டிருந்த காட்சி பக்தர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் பதினெட்டாம்படி கருப்பணசுவாமியை வழிபட்டனர்.
Advertisement
Advertisement
இரவு 7 மணிக்கு திறக்கப்பட்ட கோயில் கதவுகள் இரவு 7.05 மணிக்கு அடைக்கப்பட்டு, சந்தனம் பூசப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, பக்தி முழக்கங்களுடன் பதினெட்டாம்படி கருப்பணசுவாமியை வழிபட்டனர். அடுத்த சில நிமிடங்களில் மணிக் கதவுகள் அடைக்கப்பட்டு, சந்தனம் பூசப்பட்டது.
பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலின் கதவுகள், ஒரு ஆண்டில் 364 நாள்கள் மூடப்பட்டே இருக்கும். ஆடி பௌர்ணமி அன்று இரவு மட்டுமே இந்தக் கதவுகள் திறக்கப்படும். கதவுகள் திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் தீபங்கள் ஏற்றப்படும். பூசாரிகளால் கதவுகளுக்கு சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலைகள் அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
The opening of the ornate doors of the Pathinettampadi Karuppanasamy Temple—a key event of the Kallazhagar Temple’s Aadi Grand Festival—took place on Wednesday night.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.