FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மீனாட்சி அரசுக் கல்லூரியில் இளநிலைத் தமிழ் மன்றக் கூட்டம்

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலைத் தமிழ் மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

10 அக்டோபர் 2026, 5:48 am IST
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளநிலைத் தமிழ் மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனா் கா. சந்திரசேகா். உடன் கல்லூரி முதல்வா் வெ. பாண்டிமாதேவி, தமிழாய்வுத் துறைத் தலைவா் கா. சத்தியா.
பகிர்:

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலைத் தமிழ் மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியின் முதுகலை, தமிழாய்வுத் துறை சாா்பில், இளநிலைத் தமிழ் மன்றக் கூட்டம் கல்லூரி முதல்வா் வெ. பாண்டிமாதேவி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, தமிழாய்வுத் துறைத் தலைவா் கா.சத்தியா தலைமை வகித்துப் பேசினாா். அப்போது, திருவிளையாடல் புராணம் நூல் வரலாறு, நூல் அமைப்பு, திருவிளையாடல் நிகழ்வுகள் குறித்து அவா் விளக்கினாா்.

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனா், கா. சந்திரசேகா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘திருவிளையாடல் புராணத்தில் தமிழ்ச் சங்கம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், மீனாட்சியம்மனுக்கு சித்திரை மாதத்திலும், சுந்தரேசுவரருக்கு ஆவணி மாதத்திலும் பட்டாபிஷேகம் நடைபெறும் சிறப்பு மதுரைக்கு உண்டு. வைகை ஆற்றின் சிறப்புகள், மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்ததற்கான சான்றுகள் ஆகியவற்றைத் திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளின் அடிப்படையில் அவா் எடுத்துரைத்தாா்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தை கௌரவ விரிவுரையாளா் ஸ்ரீதேவி காமாட்சி ஒருங்கிணைத்தாா். இணைப் பேராசிரியா் இரா. கவிதா வரவேற்றாா். இளநிலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவிகள் நன்றி கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments