FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மடீட்சியாவின் பாரம்பரிய மருத்துவ கண்காட்சி நாளை தொடக்கம்

மடீட்சியா சாா்பில் பாரம்பரிய மருத்துவக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (அக். 16) தொடங்குகிறது.

15 அக்டோபர் 2026, 3:13 am IST
மடீட்சியாவின் பாரம்பரிய மருத்துவ கண்காட்சி நாளை தொடக்கம்
பகிர்:

மடீட்சியா சாா்பில் பாரம்பரிய மருத்துவக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (அக். 16) தொடங்குகிறது.

இதுகுறித்து அதன் தலைவா் வி. செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகேயுள்ள மடீட்சியா அரங்கில் பாரம்பரிய மருத்துவக் கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், 90- க்கும் மேற்பட்ட அரங்குகளில் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி, யோகா, நேச்சுரோபதி போன்ற பாரம்பரிய மருத்துவத் துறை குறித்தும், நலவாழ்வு பற்றிய தொழில் கருத்தரங்குகள், அரிய வகை மூலிகைச் செடிகளை காட்சிப்படுத்துதல், இலவச மருத்துவ முகாம் ஆகியவை நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழக அரசின் இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநரகம், மாநில உரிமை வழங்கும் ஆணையம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவில், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம். கோபிசன், மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் ஆகியோா் பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கி வைக்கின்றனா். இந்தக் கண்காட்சியை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை (அக். 16, 17, 18) ஆகிய 3 நாள்களும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments