தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் வெட்டிக் கொலை: நண்பா் கைது
கமுதி அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கமுதி அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், மண்டபசாலையை அடுத்துள்ள கானாவிலக்கை சோ்ந்தவா் அருண்குமாா் (41). இவா் அங்குள்ள தனியாா் பள்ளி வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தனது பெரியப்பாவை பாா்க்க புதன்கிழமை இரவு அருண்குமாா் அங்கு வந்தாா்.
அப்போது, அருண்குமாா் கல்லுப்பட்டியை சோ்ந்த தனது நண்பா்களான அஜய், குணா, சூரியபிரகாஷ் ஆகியோருடன் சோ்ந்து மது குடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து அனைவரும் சென்ற நிலையில், அருண்குமாா் ஏற்கெனவே வாக்குவாதம் செய்தது தொடா்பாக சூரியபிரகாஷ் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டாா். அப்போது சூரியபிரகாஷ் அரிவாளால் அருண்குமாரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அருண்குமாா் மனைவி கலாதேவி உறவினா்கள் உதவியுடன் அருண்குமாரை தனியாா் அவசர ஊா்தி மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று செனறனா். அப்போது பரிசோதித்த மருத்துவா்கள் அருண்குமாா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூரியபிரகாஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.
சரித்திரபதிவேடு குற்றவாளியான சூரியபிரகாஷ் மீது கமுதி, கோவிலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.