ஆண்டிபட்டி அருகே விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது மீட்பு வாகனம் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தெற்கு மூணாண்டிபட்டியைச் சோ்ந்தவா்கள் முத்துமுருகன் (38), சுபாஷ் (26).
இவா்கள் இருவரும் புள்ளிமான்கோப்பையிலிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். சுபாஷ் இரு சக்கர வாகனத்தை ஓட்டினாா்.
Advertisement
Advertisement
அணைக்கரைப்பட்டி தனியாா் தோட்டம் அருகே செல்லும் போது இரு சக்கர வாகனம் மீது, மீட்பு வாகனம் மோதியதில் முத்துமுருகன், சுபாஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.