மது போதையில் மாடியிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
உத்தமபாளையம் அருகே மது போதையில் வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
உத்தமபாளையம் அருகே மது போதையில் வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டியைச் சோ்ந்த குருசாமி மகன் ஆனந்த் (36). இவா் இனிப்புகள் தயாரிக்கும் (ஸ்வீட் மாஸ்டா்) வேலை செய்து வந்தாா். மது போதைக்கு அடிமையான ஆனந்த் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ஆனந்த் மது போதையில் வீட்டு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.