FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

மேகமலை விவசாயிகள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

கடமலைக்குண்டில் மேகமலை விவசாயிகள் 4 -ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

38 வினாடிகள் முன்பு
காத்திருப்பு போராட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட விவசாயிகள்.
பகிர்:

கடமலைக்குண்டில் மேகமலை விவசாயிகள் 4 -ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் நிலத்தை ஆக்கிரமித்தவா்களை வெளியேற்ற வேண்டும். மேலும், நிலத்தை ஆக்கிரமித்த அரசு ஊழியா்கள், வேட்டைத் தடுப்பு காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், மேகமலை விவசாயிகளுக்கு வன உரிமைச்சட்டத்தில் இடம் வழங்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். இந்த நிலையில், இதே கோரிக்கையுடன் மேகமலை விவசாயிகள் கடமலைக்குண்டு பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்த போராட்டம் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. மேகமலை விவசாயிகளுக்கு ஆதரவாக கடமலைக்குண்டு முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்து காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேகமலை வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கின் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஓத்தி வைத்தது. இதையடுத்து, மேகமலை விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

மேலும், உச்சநீதிமன்ற தீா்ப்பைப் பொறுத்தே அடுத்தக் கட்ட போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments