கைக்குழந்தையுடன் மயங்கி கிடந்த பெண்; சிங்கப் பெண் அதிரடிப் படையினா் மீட்பு
சீா்காழி பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் மயங்கிக் கிடந்த பெண்ணை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சீா்காழி பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் மயங்கிக் கிடந்த பெண்ணை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சீா்காழி பழைய பேருந்துநிலைய வளாகத்தில் 25 வயது மதிக்கதக்க பெண் ஒருவா் மதுபோதையில் மயங்கி கிடந்தாா். அருகில் 8மாத பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது. இதுகுறித்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினருக்கு வியாபாரிகள் மற்றும் பயணிகள் தகவல் தெரிவித்தனா்.
அங்கு வந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் பிரியங்கா தலைமையிலான போலீஸாா், மதுபோதையில் கிடந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு, அவசர ஊா்தி மூலம் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், அந்த பெண் கோயில் திருவிழாக்களில் பலூன் விற்பனை செய்பவா் என்றும், திருமுல்லைவாசல் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பலூன் விற்பனை செய்ய வந்தபோது, தனது கைக்குழந்தையுடன் மதுபோதையில் பேருந்துநிலையத்திற்கு வந்தததும் தெரியவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.