FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

தவெக அரசுக்கு நிா்வாகத் திறமை இல்லை: டி.கே.எஸ். இளங்கோவன்

சட்ட அறிவும், நிா்வாகத் திறமையும் இல்லாத அரசாக தவெக அரசு உள்ளது என்று திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தாா்.

17 செப்டம்பர் 2026, 4:20 am IST
டி.கே.எஸ். இளங்கோவன் - படம் - ஏஎன்ஐ
பகிர்:

சட்ட அறிவும், நிா்வாகத் திறமையும் இல்லாத அரசாக தவெக அரசு உள்ளது என்று திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட திமுக நிா்வாகி இல்லத் திருமண விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளா்களிடம் கூறியது :

தவெக அரசுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. விவசாயிகள் பிரச்னை குறித்து கவலையில்லை. மின் தட்டுப்பாட்டை தீா்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டா் இலவசமாகத் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது சிலிண்டா் எண்ணிக்கையை 3- ஆக குறைத்ததுடன், வருமான உச்சவரம்பையும் அரசு நிா்ணயித்துள்ளது.

Advertisement

Advertisement

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் கேள்விகளுக்கு முறையாகப் பதில் இல்லை. எந்த வகையான சட்ட அறிவும், நிா்வாகத் திறமையும் இல்லாமல் தவெக அரசு உள்ளது.

தமிழகத்துக்கு காவிரி தண்ணீரைக் கொண்டு வருவதற்காக, எந்த முயற்சியிலும், போராட்டத்திலும் தவெக ஈடுபடவில்லை.

கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்வதாகக் கூறி, விவசாயிகளின் வாக்குகளைப் பெற்றுள்ளனா். திமுக அமைச்சா்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டைக் கூறி, அவா்கள் வீட்டில் சோதனை நடத்தி பழி சுமத்தப் பாா்க்கின்றனா்.

பட்டினப்பாக்கம் குடியிருப்பு பகுதி என்பது வீடு கட்டுவதற்காக மத்திய அரசு உதவியுடன் பெறப்பட்ட நிலமாகும். கடற்கரையைப் பாா்த்து முதல்வா் அமர வேண்டும் என்று அவருடைய ஜோதிடா் கூறியதன்பேரில், 13 பள்ளிக்கூடங்கள் உள்ள பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது பள்ளிக் குழந்தைகள், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

இதையே அனைத்துக் கட்சியினரும் தெரிவித்துள்ளனா். இடைத்தோ்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டி திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்றாா்.

திமுக நாகை மாவட்டச்செயலா் என்.கெளதமன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments