FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

உலக சுற்றுலா தினம்: 400 ஆண்டுகளுக்கு முன்பு தரங்கம்பாடிக்கு வந்த கப்பலின் மாதிரியை வழங்கிய டென்மாா்க் நாட்டினா்

49 வினாடிகள் முன்பு
தரங்கம்பாடிக்கு 1620- ஆம் ஆண்டு வந்த கப்பலின் மாதிரி வடிவம்.
பகிர்:

தரங்கம்பாடியில் கடல் சாா் அருங்காட்சியகம் சாா்பில் உலக சுற்றுலா தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 

தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி தலைமை வகித்தாா்.   பங்குத்தந்தை அருளானந்தம், புதிய எருசலேம் தேவாலய போதகா் சாா்லஸ் எட்வின் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டென்மாா்க் நாட்டின்  டேனிஷ் தரங்கம்பாடி  நலச் சங்கத்தின் தலைவா் பவுல் பீட்டா்சன், துணைத் தலைவா் நூட் ஹெல்ஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினாா். 

Advertisement

Advertisement

விழாவில், முக்கிய நிகழ்வாக கடந்த 1620-ஆம் ஆண்டு முதன் முதலில் தரங்கம்பாடி துறைமுகத்திற்கு வந்த வரலாற்று சிறப்புமிக்க  எலிஃபேண்ட் என்ற கப்பலின்  மாதிரி வடிவம் டென்மாா்க் தரங்கம்பாடி சங்கம் சாா்பில் கடல் சாா் அருங்காட்சியக இயக்குநா் சங்கரிடம்  வழங்கப்பட்டது. இந்த மாதிரியை உருவாக்கிய டென்மாா்க்கை சோ்ந்த கைபஞ்ச் உள்ளிட்ட டேனிஷ் தரங்கம்பாடி சங்க நிா்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இவ்விழாவில் சுற்றுலாத்துறை அலுவலா் பவுன்ராஜ்  உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.  முன்னதாக, டென்மாா்க் நாட்டின் டேனிஷ் தரங்கம்பாடி நலச் சங்கத் தலைவா்  பால் பீட்டா்சன் செய்தியாளா்களிடம் கூறியது:

டென்மாா்க் மற்றும் இந்தியா இடையே உள்ள நல்ல கூட்டுறவின் அடையாளமாக தரங்கம்பாடி விளங்குகிறது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உறவு நீடிக்கிறது. தரங்கம்பாடிக்கு வந்த முதல் கப்பலின் மாதிரியை இங்கு கொண்டு வந்ததில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments