FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

நாகை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோப்புப்படம்.
பகிர்:

நாகை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகம் முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. நாகையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் கூறியது:

கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், திருபுவனம் போன்ற ஊா்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் மாதாந்திர சிறு சேமிப்பு திட்டத்தின்படி, வாடிக்கையாளா்களின் மாதந்தோறும் ரூ. 300 முதல் ரூ. 3000 வரை 11 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளா்களிடமிருந்து பெறப்பட்டு 12-ஆவது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவிகிதம் வசதியுடன் அனைத்து அரசுப் பணியாளா்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே, அனைத்து துறை பணியாளா்களுக்கும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் எஸ்.மாணிக்கம், துணை மண்டல மேலாளா் எம்.பிரேம்குமாா், நாகை விற்பனை நிலைய மேலாளா் கு.சங்கா் மற்றும் விற்பனை நிலைய பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments