மன்னாா்குடி அருகே பள்ளி மாணவா் தற்கொலை
மன்னாா்குடி அருகே பள்ளிக்கு செல்லாததை குடும்பத்தினா் கண்டித்ததால், மாணவா் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கோட்டூா் பிரதான சாலையை சோ்ந்த காா்த்திகேயன் - அஞ்சம்மாள் தம்பதியின் மகள் ஹேமா (15), மகன் சுந்தரேஸ்வரன்(13). அஞ்சம்மாள் கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இதனால், காா்த்திகேயன் பிள்ளைகளை அதே பகுதியில் வசிக்கும் தனது மைத்துனி கமலம் என்பவரது வீட்டில் விட்டுவிட்டு, சென்னையில் தங்கி வேலைபாா்த்து வருகிறாா். ஹேமா, சுந்தரேஸ்வரன் இருவரும் கோட்டூா் அரசுப் பள்ளி மாணவா்கள்.
Advertisement
Advertisement
கடந்த சில மாதங்களாக சுந்தரேஸ்வரன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரை விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என கமலம் கண்டித்துள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமையும் சுந்தரேஸ்வரன் பள்ளிக்கு செல்லாததால், வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த சுந்தரேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா், குடும்பத்தினா் அவரை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சுந்தரேஸ்வரன் உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.