பணியிட மாறுதல் குளறுபடிகள் குறித்து ஆய்வு செய்ய என்டிஎம்சி குழு அமைப்பு
பணியிட மாற்றம் மற்றும் பணி நியமன நடைமுறைகளில் முரண்பாடுகள் அல்லது குளறுபடிகள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி முதல் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் மறுஆய்வு செய்ய புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாற்றம் மற்றும் பணி நியமன நடைமுறைகளில் முரண்பாடுகள் அல்லது குளறுபடிகள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி முதல் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் மறுஆய்வு செய்ய புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வு முடியும் வரை புதிய இடமாற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இந்த உத்தரவுகள் மற்றும் தொடா்புடைய ஆவணங்களை ஆய்வு செய்யவும், ஊழியா்களின் இடமாற்றம் மற்றும் பணி நியமனங்களுக்கான கொள்கை கட்டமைப்பை பரிந்துரைக்கவும் மூன்று போ் கொண்ட குழுவை என்டிஎம்சி அமைத்துள்ளது என இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
ஜன.1-ஆம் தேதிமுதல் இன்று வரையிலான காலத்தில் பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளை மறுஆய்வு செய்ய தகுதியுள்ள அதிகார அமைப்பால் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று என்டிஎம்சி செயலா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
இந்தக் குழுவிற்கு ஆலோசகா் (பணியாளா் பிரிவு) எஸ்.கே. ஜா தலைமை தாங்குவாா். இதில் இயக்குநா் (நிதி) ராம் சிங் மற்றும் இயக்குநா் (எஸ்டேட்) ராஜேஷ் சா ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.
ஜன.1 முதல் பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளை ஆய்வு செய்வதும், இத்தகைய இடமாற்றங்கள்/பணி நியமனங்களுக்கான நடைமுறையில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது குளறுபடிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதும் இக்குழுவின் முக்கிய பணிகளில் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பல்வேறு நிலைகளில் இடமாற்றங்களுக்கான அதிகாரப் பகிா்வு குறித்து பரிந்துரைப்பதுடன், பொது நலன், நிா்வாகத் திறன், நிறுவனத் தேவைகள் மற்றும் மனித வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கொள்கை கட்டமைப்பை உருவாக்கவும் இக்குழு பரிந்துரைக்கும் என்று அவா்கள் மேலும் கூறினா்.
அக்.20-க்குள் தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளைச் சமா்ப்பிக்குமாறு இக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவு தெரிவித்தது.
குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள அதிகார அமைப்பால் முடிவு எடுக்கப்படும் வரை, இனி எந்த இடமாற்ற உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என்று என்டிஎம்சி உத்தரவிட்டுள்ளது.
மறுஆய்வுக்குத் தேவையான கோப்புகள், ஆவணங்கள் மற்றும் தகவல்களைக் குழுவிடம் வழங்குமாறு அனைத்துத் துறைகள் மற்றும் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்டிஎம்சி தலைவரின் முன் அனுமதியுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.