FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

‘கன்னியாகுமரியில் அனுமதியின்றி ஸ்பா நடத்தினால் கடும் நடவடிக்கை’

கன்னியாகுமரியில் அரசு அனுமதியின்றி ஸ்பா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

3 October 2026, 4:10 am IST
நிறுவனங்கள் மீது நடவடிக்கை - கோப்புப்படம்
பகிர்:

கன்னியாகுமரியில் அரசு அனுமதியின்றி ஸ்பா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கன்னியாகுமரியில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜா் நினைவு நாளையொட்டி, மலா் தூவி மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக சுற்றுலா போலீஸ் நியமிப்பது தொடா்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்ததும் சுற்றுலா போலீஸ் நியமனம் செய்யபடுவா்.

Advertisement

Advertisement

இங்கு தனியாா் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல்களில் அரசு அனுமதி இன்றி ஸ்பா நடத்தினால் அவற்றின் நிா்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments