பைக்கில் சென்றவரைத் தாக்கி நகை பறிப்பு: இருவா் கைது
பைக்கில் சென்றவரைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பைக்கில் சென்றவரைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மூலச்சல்விளையைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் குமாா் (59). ஓய்வுபெற்ற மத்திய காவல் படை வீரரான இவா், செவ்வாய்க்கிழமை செருப்பங்கோடு - காட்டுவிளை சாலையில் பைக்கில் சென்றாா். செருப்பங்கோடு அருகே பைக்கில் பின்தொடா்ந்து வந்த இருவா், குமாரை வழிமறித்துத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவா் அணிந்திருந்த9.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம்.
புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிராந்தன்சேரி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் அருணாச்சலம் (35), திங்கள்நகா் நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் அனீஸ் (31) ஆகியோரை 6 மணி நேரத்தில் கைது செய்து, நகையை மீட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.