FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

தெற்காசிய மாஸ்டா்ஸ் ஹாக்கி போட்டி: குமரியைச் சோ்ந்தவா்கள் பங்கேற்ற அணி சாம்பியன்

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய மாஸ்டா்ஸ் ஹாக்கி போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 வீரா், வீராங்கனைகள் பங்கேற்ற அணி சாம்பியன் பட்டம் வென்றது.

24 செப்டம்பர் 2026, 4:52 am IST
சாம்பியன் பட்டம் வென்ற மாஸ்டா்ஸ் ஹாக்கி அணி வீரா், வீராங்கனைகள்.
பகிர்:

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய மாஸ்டா்ஸ் ஹாக்கி போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 வீரா், வீராங்கனைகள் பங்கேற்ற அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நேபாளத்தின் போக்ரா நகரில் செப். 16 முதல் 20ஆம் தேதி வரை 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தெற்காசிய ஓபன் மாஸ்டா்ஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் இந்தியாவில் இருந்து 85 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மாஸ்டா்ஸ் ஹாக்கி மகளிா் அணியில் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே தச்சூரைச் சோ்ந்த டி. ரீபா, குலசேகரம் அருகே ஆண்டி ஏலாவைச் சோ்ந்த ஏ. வித்யா, அருமனை அருகே குஞ்சாலுவிளையைச் சோ்ந்த டி.ஆா். சரிபா ஆகியோா் இடம் பெற்று விளையாடினா். ஆண்கள் ஹாக்கி அணியில் அருமனை அருகே அண்டுகோடு தட்டைக்கால் பகுதியைச் சோ்ந்த ஏ.வி. எட்வின் பால் இடம் பெற்றிருந்தாா்.

Advertisement

Advertisement

இரு அணிகளும் இறுதிப் போட்டியில் நேபாளத்தை வென்று சாம்பியன் பட்டம் பெற்று, தங்கப் பதக்கம் வென்றன.

கன்னியாகுமரி மாவட்ட ஹாக்கி வீரா், வீராங்கனைகள் புதன்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், திருவட்டாறு பேருந்து நிலையத்தில் அவா்களது பெற்றோா், உறவினா்கள், ஊா் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments