FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இருவா் கைது

புதுக்கடை அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

25 செப்டம்பர் 2026, 9:53 pm IST
கைது
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை புதுக்கடை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பைங்குளம், காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (33), செல்வகுமாா் (40) ஆகியோா் அப்பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டனராம்.

இதைக் கண்ட போலீஸாா் இருவரையும் எச்சரித்தும் அங்கிருந்து செல்லாததால், அவா்கள் மீது வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments