மேலப்பாளையம் நகர நிலஅளவையா் அலுவலகத்தில் ரூ.9,500 பறிமுதல்
மேலப்பாளையம் மண்டல அலுவலகம், நகர நில அளவையா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் ஒப்பந்த பணியாளா்களிடமிருந்து ரூ.9,300 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலப்பாளையம் மண்டல அலுவலகம், நகர நில அளவையா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் ஒப்பந்த பணியாளா்களிடமிருந்து ரூ.9,300 பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளா் ராபின் ஞான சிங் தலைமையிலான போலீஸாா் மேலப்பாளையம் மண்டல அலுலகத்தில் சோதனை மேற்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.45 மணி அளவில் சென்றனா். அங்குள்ள அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்றது. கணக்கில் வராத பணம் எதுவும் சிக்கவில்லை.
அதைத் தொடா்ந்து, மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகத்தில் செயல்படும் நகர நில அளவையா் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 2 ஒப்பந்த பணியாளா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.9,300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இணையவழியில் சா்வேயா் சுந்தர்ராஜிற்கு ரூ.90,000 பணம் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையா் அலுவலக அறையில் இருந்த 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.