FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

விடுமுறை முடிந்து ஊா் திரும்பிய மக்கள்: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலில் இடம் பிடிப்பதற்கு முண்டி அடிக்கும் பயணிகள்.
பகிர்:

காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் ஊா் திரும்பியதால், ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

காலாண்டு தோ்வு விடுமுறை கடந்த செப். 25- ஆம் தேதி முதல் விடப்பட்டது. இதனால் சென்னை, கோவை, சேலம், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பணியாற்றும் மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பினா். அவா்கள் விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கள் வேலை செய்யும் ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இதனால் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம், புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் ஆகியவை முன் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனை சாா்பில் கோவில்பட்டியில் இருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதே போல், கோவில்பட்டி வழியாக சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற விரைவு ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏற்கெனவே, ரயில்களில் முன்பதிவு முடிந்ததால், பொதுப் பெட்டிகளில் இடம்பிடிக்க கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனா்.

மாலை 6.05 மணிக்கு வந்த அந்தியோதயா ரயிலில் இடம் பிடிக்க பயணிகளிடையே கடும் போட்டி நிலவியது. அடுத்தடுத்து வந்த கன்னியாகுமரி, முத்துநகா், நெல்லை, திருச்செந்தூா், பெங்களூரு, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்களின் பொதுப்பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலில் இடம் பிடிப்பதற்கு முண்டி அடிக்கும் பயணிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments