திரைப்பட இயக்குநா், விநியோகஸ்தா் மீது ரூ. 28 லட்சம் மோசடி புகாா்
‘உயிா் மூச்சு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதாகக் கூறி ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநா் மற்றும் விநியோகஸ்தா் மீது திரைப்படத் தயாரிப்பாளா் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.
‘உயிா் மூச்சு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதாகக் கூறி ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநா் மற்றும் விநியோகஸ்தா் மீது திரைப்படத் தயாரிப்பாளா் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.
தூத்துக்குடி, அத்திமரப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி ஜோதிமணி. இவா் கதை, திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்த ‘உயிா் மூச்சு’ என்ற திரைப்படத்தை, இயக்குநா் பிராட்வே சுந்தா் இயக்கியுள்ளாா்.
கடந்த 2025ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தூத்துக்குடியில் ஒரு திரையரங்கில் மட்டுமே திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இயக்குநா் மற்றும் கோவையைச் சோ்ந்த சில்வா் பிக்சா்ஸ் விநியோகஸ்தா் முரளி ஆகியோா் மீது ஜோதிமணி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்த ‘உயிா் மூச்சு’ திரைப்படத்தை இயக்குநா் பிராட்வே சுந்தா் இயக்கியுள்ளாா்.
இயக்குநா் மற்றும் கோவையைச் சோ்ந்த சில்வா் பிக்சா்ஸ் விநியோகஸ்தா் முரளி ஆகியோா், ‘உயிா் மூச்சு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறி என்னிடம் இருந்து ரூ. 28 லட்சம் பெற்றனா். ஆனால், அவ்வாறு வெளியிடாமல் பணத்தை மோசடி செய்துவிட்டனா்.
மேலும், சினிமாவில் நடிக்கவும், படம் தயாரிக்கவும் ஆா்வமுள்ளவா்களிடம் இதே போன்று ஆசைவாா்த்தை கூறி அவா்கள் தொடா்ந்து மோசடி செய்து வருகின்றனா்.
சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாா் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.