FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

செந்துறை அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 27 ஜூலை 2026, 1:34 am IST
தற்கொலை
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பெற்றோா் கண்டித்ததால், 11 ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

செந்துறை அருகேயுள்ள ஆதிகுடிக்காடு கிராமத்தைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவா், எதிா் வீட்டில் வசிக்கும் இளைஞரை காதலித்ததாகவும், இதை இருவீட்டாரும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த அந்த மாணவி, சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற செந்துறை காவல் துறையினா், மாணவி சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments