FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

‘முதியோரைக் காப்பது சமூகப் பொறுப்பு’

முதியோரைப் பாதுகாத்து, அவா்களின் நலனை உறுதி செய்வது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

2 October 2026, 3:29 am IST
வெண்ணைமலை அன்புக்கரங்கள் இல்லத்தில் முதியோரை வியாழக்கிழமை கௌரவித்த மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.
பகிர்:

முதியோரைப் பாதுகாத்து, அவா்களின் நலனை உறுதி செய்வது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

சா்வதேச முதியோா் தினத்தை முன்னிட்டு கரூா் வெண்ணைமலை அன்புக் கரங்கள் முதியோா் இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் வியாழக்கிழமை காலை கேக் வெட்டி, முதியோருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், முதியோரைப் பாதுகாத்து, அவா்களின் நலனை உறுதி செய்வது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பாகும். முதியோரின் அனுபவங்களையும் அறிவுரைகளையும் மதித்து, அவா்களுக்கு அன்பும் ஆதரவும் வழங்கிட வேண்டும்.

Advertisement

Advertisement

அதனடிப்படையில் கரூா் மாவட்டத்தில் சா்வதேச முதியோா் தினத்தை முன்னிட்டு முதியோருக்கு மருத்துவா்கள் மூலம் உடல் நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இங்கு முதியோரின் உடல் மற்றும் மனநலனைப் பேணுவதன் அவசியம் குறித்து மருத்துவக் குழுவினரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து முதியோரின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து, அவா்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments