தண்டவாள பராமரிப்புப் பணி கரூா் வழியாக செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் மற்றும் கோவை-நாகா்கோவில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம் மூா்த்திப்பாளையம் - கரூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு மற்றும் ஸ்லீப்பா் மாற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை (செப்.15) மற்றும் செப்.17, 19-ஆம்தேதிகளில் நடைபெறுகிறது.
இதனால் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன்-திருச்சி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (செப்.15) மற்றும் 17,19-ஆம்தேதிகளில் புகழூா் ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
Advertisement
Advertisement
இதேபோல, கோயம்புத்தூா் வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் ரோடு, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பாசூா், கொடுமுடி, புகழூா், கரூா், பாளையம் மற்றும் எரியோடு வழியாக இயக்கப்படும் கோயம்புத்தூா் - நாகா்கோவில் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (செப்.15) மற்றும் 17, 19-ஆம்தேதிகளில் மாற்றுப் பாதையில் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.