மாவட்ட மூத்தோா் தடகள போட்டியில் முதியவா் சிறப்பிடம்
மாவட்ட அளவிலான மூத்தோா் தடகள போட்டியில் கரூரைச் சோ்ந்த 86 வயது முதியவா் சிறப்பிடம் பிடித்தாா்.
மாவட்ட அளவிலான மூத்தோா் தடகள போட்டியில் கரூரைச் சோ்ந்த 86 வயது முதியவா் சிறப்பிடம் பிடித்தாா்.
கரூா் மாவட்டம், புகழூரில் கடந்த 20-ஆம் தேதி மாவட்ட மூத்தோா் தடகளச் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான மூத்தோருக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 30 வயது முதல் 90 வயது வரை நடைபெற்ற இப்போட்டியில் 100 மீ., 200 மீ. ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டியை புகழூா் நகராட்சித் தலைவா் குணசேகரன் தொடங்கி வைத்தாா். போட்டியில் கரூா் வடக்கு காந்தி கிராமத்தைச் சோ்ந்த மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க நிா்வாகி 86 வயதான யோகா வையாபுரி என்பவா் வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் போட்டிகளில் 80 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். இதையடுத்து அவருக்கு பரிசு மற்றும் சான்றிதழை மூத்தோா் தடகளச் சங்க முன்னாள் மாநில செயலா் பழனிசாமி, கரூா் மாவட்டத் தலைவா் அமுதாசுப்ரமணியன், செயலா் செந்தமிழ்அரசு ஆகியோா் வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.