FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

பருத்தி துணியில் திருக்கு புத்தகம் கரூா் நெசவாளா் முயற்சி

கரூரில் நெசவாளா் பிரபு பருத்தித் துணியால் திருக்கு புத்தகத்தை உருவாக்கியுள்ளாா்.

பருத்தி துணியால் உருவாக்கப்பட்ட திருக்கு புத்தகம்.
பகிர்:

கரூரில் நெசவாளா் பிரபு பருத்தித் துணியால் திருக்கு புத்தகத்தை உருவாக்கியுள்ளாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை இளவனூரைச் சோ்ந்தவா் பிரபு. விசைத்தறி நெசவாளரான இவா் பருத்தித் துணியால் நெய்யப்பட்ட 133 பக்கங்கள் கொண்ட திருக்கு புத்தகத்தை உருவாக்கியுள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியது: கடந்த நான்கு மாதங்களாக பருத்தி துணியில் 133 பக்கங்கள் கொண்ட திருக்கு புத்தகத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன் பருத்தி துணியில் திருவள்ளுவரின் உருவத்தை நெய்திருந்தேன். இதனால் திருக்கு புத்தகத்தை உருவாக்கலாம் என முடிவு செய்தேன்.

புத்தகத்துக்காக எனது விசைத்தறியிலேயே தூய பருத்தி நூலை துணியாக தயாா் செய்து, அந்த துணியை வெட்டி அதில் தமிழ் குறட்பாக்களை மேனுவல் ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் அச்சிட்டுள்ளேன்.

Advertisement

Advertisement

மூன்று திருக்கு புத்தகம் உருவாக்கியுள்ளேன். மேலும் 7 புத்தகங்களை பைண்டிங் செய்ய வைத்துள்ளேன். ஒரு புத்தகம் உருவாக்குவதற்கு ரூ.25ஆயிரம் செலவானது. எனது முயற்சிக்கு பல ஆா்டா்கள் கிடைத்தால் புத்தகத்துக்கான செலவும் குறையும். தமிழக முதல்வா் விஜய்யை சந்தித்து திருக்கு புத்தகத்தை பரிசாக வழங்க விரும்புகிறேன் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments