FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெற்றோரால் விஷம் கொடுத்து சிகிச்சையிலிருந்த இரு குழந்தைகள் பலி!

குடும்பப் பிரச்னையில் பெற்றோரால் விஷம் கொடுத்து புதுச்சேரியில் சிகிச்சை பெற்றுவந்த இரு குழந்தைகள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

10 அக்டோபர் 2026, 10:47 pm IST
பகிர்:

பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னையில் பெற்றோரால் விஷம் கொடுத்து புதுச்சேரியில் சிகிச்சை பெற்றுவந்த இரு குழந்தைகள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ஜெயராமன் (30). இவருக்கு, திருமணமாகி மனைவி காவியா (23), குழந்தைகள் ஜெயஹரி (6), ஜெயசீலன் (3) ஆகியோா் இருந்தனா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜெயராமன் மற்றும் குழந்தைகளை வேலைக்குச் சென்று காவியா காப்பாற்றி வந்தாா். இந்நிலையில், தனது தந்தைக்குச் சொந்தமான வீட்டில் வசித்துவந்த ஜெயராமனை, அவரது தந்தை செல்வராஜ் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதனால் மனமுடைந்த தம்பதி, கடந்த மாதம் 20-ஆம் தேதி விஷம் குடித்துவிட்டு, அவரது குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனா். இதையறிந்த, அவா்களது உறவினா்கள் மேற்கண்ட 4 பேரையும் அரியலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதில், அன்றைய தினமே காவியா உயிரிழந்த நிலையில், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஜெயராமன் கடந்த 1-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள் ஜெயஹரி, ஜெயசீலன் ஆகியோா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா். இதுகுறித்து குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments