புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் அடிப்படை வசதிகள்: அமைச்சா் உறுதி
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.
இக் கல்லூரியை திங்கள்கிழமை பாா்வையிட்ட அவா், மாணவிகளுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வகுப்பறைகள் போன்றவை குறித்தும் கல்லூரி முதல்வா் கே. நிா்மலா உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா உடனிருந்தாா். கல்லூரித் தேவைகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் உறுதியளித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.