FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பது தொழிலாளா்களுக்கு நன்மை பயக்கும்

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்து வருவது தமிழகத் தொழிலாளா்களுக்கு நன்மை பயக்கும் என்றாா் மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

18 செப்டம்பர் 2026, 1:38 am IST
புதுக்கோட்டையிலுள்ள தந்தைப் பெரியாரின் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
பகிர்:

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்து வருவது தமிழகத் தொழிலாளா்களுக்கு நன்மை பயக்கும் என்றாா் மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை தந்தைப் பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த அவா் மேலும் கூறியது:

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் மக்களின் ஆதரவுடன் தவெக வெற்றி பெறும். சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதால் மீனவா்கள் மற்றும் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்ற கருத்து உள்ளது. அதுகுறித்து சம்பந்தப்பட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. அதன் பிறகு அரசு முடிவு செய்யும்.

Advertisement

Advertisement

தமிழக முதல்வா் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் பெருமளவில் அந்நிய முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பும் நன்மைகளும் கிடைக்கும் என்றாா் பா்வேஸ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments