FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம்

பருவமழையின்போது, மக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

23 செப்டம்பர் 2026, 3:02 am IST
புதுக்கோட்டையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.
பகிர்:

பருவமழையின்போது, மக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படும் பகுதிகள், நீா்நிலைகளை முன்கூட்டியே பாா்வையிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

மக்களின் இயல்புநிலை பாதிக்காத வகையிலான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் அந்த இடங்களில் அத்தியாவசியமான தேவைகள் அனைத்தும் இருக்கும் வகையிலும் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் முகமது பா்வேஸ்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ந. சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையா் எம். காந்திராஜ், கூட்டுறவு இணைப் பதிவாளா் தீபாசங்கரி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments