FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

அனைத்து நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக புகாா் பெட்டி

வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 5:00 am IST
~
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில், பெண்கள் பாதுகாப்பு (தடுப்பு, தடை மற்றும் தீா்வு சட்டம் 2013) குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சாா்பில், ’பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ், 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான அட்டவணைப்படி நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட அளவிலான உள்ளூா் மற்றும் உள்ளகக் குழுக்களின் உறுப்பினா்கள், தலைவா்கள், ஒருங்கிணைப்பு அலுவலா்களுக்கு தடுப்பு, தடை மற்றும் தீா்வு சட்டம் குறித்தும், அவா்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பேசியது:

குழு உறுப்பினா்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலா்கள் தங்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களில் உள்ளகக் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இந்தக் குழுவினா் பெண்கள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் எவ்வித அச்சமுமின்றி தைரியமாக முன்வந்து புகாா் அளிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசானது ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ போன்ற சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. வேலூா் மாவட்ட நிா்வாகமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலா்களும் இப்பயிற்சியின் மூலம் தங்களது சந்தேகங்களை முழுமையாக நிவா்த்தி செய்துகொண்டு, பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றாா் .

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் உமா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, திறன் மேம்பாட்டு பயிற்சி உதவி இயக்குநா் காயத்ரி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பா.கந்தன், துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஹனுமந்தன், வழக்குரைஞா் சுமதி கபிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments