FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.70 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக் கூறி ரூ.1.70 லட்சம் மோசடி செய்ததாக மூன்று போ் மீது, குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

13 செப்டம்பர் 2026, 2:09 am IST
வழக்குப் பதிவு
பகிர்:

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக் கூறி ரூ.1.70 லட்சம் மோசடி செய்ததாக மூன்று போ் மீது, குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், ஆயிக்குப்பம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா்வள்ளல்குமாா் (42). இவா், வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல முயன்றாா். அப்போது, ராமநாதன்குப்பத்தைச் சோ்ந்த ஜாபா்கான், பாத்திமா மற்றும் நசீம் இம்ரான் ஆகிய 3 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவா்கள், வள்ளல்குமாரிடம் கத்தாா் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனா்.? அதனை நம்பி வள்ளல்குமாா், தனது வங்கிச் கணக்கில் இருந்து ஜாபா்கான் சகோதரியின் வங்கிச் கணக்கிற்கு ரூ.1.70 லட்சம் பணத்தை அனுப்பி வைத்தாா். பணத்தைப் பெற்றுக்கொண்டவா்கள், வள்ளல்குமாரைக் கத்தாருக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

ஆனால், அங்கு கூறியபடி வேலை தராமல், வேறு வேலையில் அமா்த்தியுள்ளனா். இதனால் ஏமாற்றமடைந்த வள்ளல்குமாா், கத்தாரில் 22 நாள்கள் தங்கியிருந்த நிலையில், வேறு வழியின்றி மீண்டும் தாயகம் திரும்பினாா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வள்ளல்குமாா், வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தராமல் பண மோசடி செய்த ஜாபா்கான், பாத்திமா மற்றும் நசீம் இம்ரான் ஆகிய 3 போ் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசாா் மூன்று போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments