FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மாணவி புகாா்: பேராசிரியா் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரின் பேரில் பேராசிரியா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

27 செப்டம்பர் 2026, 12:41 am IST
வழக்குப் பதிவு - IANS
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரின் பேரில் பேராசிரியா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் அப்பகுதியை சோ்ந்த 29 வயது மாணவி, ஆராய்ச்சி படிப்பு படித்து வருகின்றாா்.

இவா் தற்போது வேதியியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் கடந்த 15.07.2026 அன்று பல்கலைக்கழக வேதியியல் துறை அலுவலகத்திற்கு சென்ற போது அங்கிருந்த அத்துறைத் தலைவா் ராஜேந்திரன் அந்தப் பெண்ணிடம் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றி அவதூறாகவும், அநாகரீகமாகவும் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாணவி அண்ணாமலை நகா் போலீசில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் அண்ணாமலை நகா் போலீசாா் பேராசிரியா் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments