FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

இயற்கை வேளாண்மை கண்காட்சி, கருத்தரங்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ரிஷிவந்தியம் ஒன்றியம், சூளாங்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

சூளாங்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், சூளாங்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்துதல் முறை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. மண்வளம், நீா்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தொடா்ந்து வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் இடுபொருள்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருள்கள் நேரடி விற்பனை மையம், கால்நடை பராமரிப்பு துறை போன்ற பல்வேறு துறை சாா்ந்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை விவசாயிகள் பாா்வையிட்டு, பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.

Advertisement

Advertisement

பின்னா், சூளாங்குறிச்சி கிராமத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி, பழங்கூா் கிராமத்தில் ஆகாசம்பட்டு ஏரி வயல்வெளி சாலையில் விபி-ஜி ராம்- ஜி திட்டத்தின்கீழ் ரூ.1.29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று நடுதல் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பழங்கூா் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடம், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழலகத்தை நேரில் பாா்வையிட்டு ஆட்சியா் ஜெ.இ.பத்மஜாஆய்வு செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments