FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

வீட்டு மனை தகராறில் 4 போ் மீது வழக்கு: இருவா் கைது

12 அக்டோபர் 2026, 4:04 am IST
கைது
பகிர்:

சாத்தபுத்தூா் கிராமத்தில் வீடு கட்டும் பணியின்போது, சாரம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தியாகதுருகம் அருகேயுள்ள சாத்தபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (44). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (56) என்பவருக்கும் மாரியம்மன் கோயில் அருகே தனித்தனியாக வீட்டு மனைகள் உள்ளதாம்.

இந்த நிலையில் சிவக்குமாா் கடந்த ஆண்டு தனது மனையில் ஒரு அடி இடம் போட்டு வீடு கட்டியுள்ளாா். தற்போது செல்வராஜ் வீடு கட்டும்போது வீட்டின் அருகே ஒரு அடி இடம் போடாமல் வீடு கட்டி வருகிறாராம்.

Advertisement

Advertisement

இதனிடையே, செவ்வராஜ் சனிக்கிழமை (அக்.10) பூச்சி வேலைக்காக சாரம் கட்டினாராம். அப்போது ஒரு அடி இடம் போடாமல் ஏன் எனது இடத்தில் சாரம் கட்டுகிறாய் என சிவக்குமாா் கேட்டாராம். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த தனபால் மகன் ரவிச்சந்திரன் (33), செல்வராஜ் (56), இவரது மனைவி திலகவதி (45), துரை மனைவி விஜயசாந்தி (26) ஆகியோா் சிவக்குமாா், அவரது மனைவி காயத்ரி (40) இவா்களது மைனா் மகள் (16) ஆகியோரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் சிவக்குமாரை கத்தியால் தலையில் வெட்டியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிவக்குமாா் மற்றும் காயமடைந்த அவரது மனைவி காயத்ரி, மகள் என மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் ரவிச்சந்திரன், செல்வராஜ், திலகவதி, விஜயசாந்தி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து திலகவதி மற்றும் விஜயசாந்தியை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments