FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தொழில் கண்காட்சி தொடக்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் 3 நாள் நடைபெறும் தொழில்கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

17 செப்டம்பர் 2026, 3:36 am IST
பட விளக்கம்... இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை தொடங்கிய தொழில் கண்காட்சியில் விழா கையேட்டை வெளியிட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் எம்எல்ஏ ஏ.ஜான்குமாா், அரசின் தலைமை செயலா் சரத் செளகான் உள்ளிட்டோா்.
பகிர்:

இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் 3 நாள் நடைபெறும் தொழில்கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் இதைத் தொடங்கி வைத்தாா். புதுச்சேரி 100 அடி சாலை சுகன்யா மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அனுமதி இலவசம். இதில் 70-க்கும் மேற்பட்ட உற்பத்தி தொழில்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்சாலைகள் உற்பத்தி செய்த பொருள்களைக் காட்சிக்கு வைத்துள்ளன. இதில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், பொறியியல், ஆட்டோ மொபைல் கம்பெனிகள், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், புதுப்பிக்கவல்ல எரிசக்தி தொழில்சாலைகள், ரசாயனம், பிளாஸ்டிக், பேக்கிங் மற்றும் உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம்,

தளவாடங்கள் உற்பத்தி உள்ளிட்டதொழிற்சாலைகள் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தலைவா் எம்.நடராஜன், துணைத் தலைவா் டி. சுப்பிரமணியன், இக் கண்காட்சியின் தலைவா் ஏ.எல்.ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments