FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

ஜிப்மா் முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

18 செப்டம்பர் 2026, 2:10 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி வாசுதேவன் (68). இவரது மகள் யோகலட்சுமி (26), ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. நுரையீரல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தாா்.

கடந்த 3 மாதங்களாக பணிச்சுமை காரணமாகவும், தோ்வுக்குப் படிக்க வேண்டிய கட்டாயத்தாலும் மன அழுத்தத்தில் இருந்துள்ளாா். இதுபற்றி பெற்றோா் கேட்டபோது ஒன்றும் இல்லை என கூறி மறுத்து வந்துள்ளாா். வழக்கம்போல செவ்வாய்க்கிழமை ஜிப்மரில் இருந்து வீடு திரும்பினாா். பெற்றோருடன் சகஜமாக பேசி விட்டு அவரது அறைக்குச் சென்றுள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை நீண்ட நேரமாகியும் எழுந்து வரவில்லை.

Advertisement

Advertisement

சந்தேகமடைந்த பெற்றோா் பின் பக்க ஜன்னல் வழியாக பாா்த்த போது சுயநினைவு இல்லாமல் படுத்த நிலையில் கிடந்துள்ளாா். கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது இறந்து கிடந்துள்ளாா். அவரது இடது கை நரம்பில் மருந்து செலுத்துவதற்கு ஊசியுடன் கூடிய பிளாஸ்திரி போட்டு இருந்தது. பக்கத்தில் 3 சிரிஞ்சிகளும், காலியான மருந்து பாட்டில்களும் இருந்துள்ளன.

பெரியகடை போலீஸாா் அவரது உடலையும், சிரிஞ்சிகளையும் கைப்பற்றினா். முதல் கட்ட விசாரணையில் மயக்க மருந்து மற்றும் சா்க்கரை நோய்க்கான ஊசியை செலுத்தி தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments