FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல்: வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்களை மாநில தோ்தல் ஆணையம் சனிக்கிழமை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

20 செப்டம்பர் 2026, 2:19 am IST
பகிர்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்களை மாநில தோ்தல் ஆணையம் சனிக்கிழமை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 11 போ் போட்டியிடுகின்றனா். இவா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம்: அடைப்புக்குறிக்குள் வேட்பாளா்கள் சாா்ந்த கட்சி.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள்: அசோக் ஆனந்த்- ( அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் )-ஜக்கு, கு.சேது(எ) சேது செல்வம் (திமுக ) உதயசூரியன், இ.விநாயகம் ( இந்திய தேசிய காங்கிரஸ்)-கை, கலைவாணன்( இந்திய குடியரசுக் கட்சி)-ஒலிவாங்கி, ச. காா்த்திக் குமாரி(நாம் தமிழா் கட்சி) தென்னந்தோப்பு, அ.மு. சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் )தானியக் கதிா்களும் அரிவாளும்.

Advertisement

Advertisement

சுயேச்சை வேட்பாளா்கள்: ஆா். சாமிநாதன்- நீா்த் தொட்டி, எம்.நித்யா -மின்கல விளக்கு, ஏ.ரகு(எ) ரகுநாதன் -பிரஷா் குக்கா், எஸ். வசந்தி -கெண்டி, ஆா். ஜெயபாலன் -ஏழு கதிா்களுடன் கூடிய பேனா முனை. இத்தகவலை தட்டாஞ்சாவடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments