புதுச்சேரி கடற்கரையில் துருப்பிடித்த மின்கம்பம் சாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
புதுச்சேரி கடற்கரையில் சாலையோரம் அழகுக்காக நிறுத்தப்பட்டிருந்த இரும்பு மின்கம்பம் துருப்பிடித்து சாய்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதித்க்கப்பட்டு உயிரிழந்தாா்.
உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்தவா் முகமது தஸ்லின் (28). இவரது மனைவி ரிகானா. தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனா். கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் வசித்து வரும் இவா்கள், கடற்கரையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மகன் பஜல் (5) பெற்றோா்களுடன் கடற்கரைக்கு வந்தாா். அங்கு அவா் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த துருப்பிடித்த இரும்பு மின்கம்பம் உடைந்து விழுந்தது.
Advertisement
Advertisement
இதில் பஜல் சிக்கிக்கொண்டதால், அவருக்கு கழுத்து, மாா்பு பகுதியில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை அங்கிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பஜல் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.