FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

காவலா்களின் குழந்தைகள் 44 பேருக்கு கல்வி உதவித்தொகை

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:13 am IST
மாணவிக்கு உயா்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.மதிவாணன்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.மதிவாணன் பங்கேற்று காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையை வழங்கினாா்.

கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ.13 ஆயிரம், சட்டம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பாடப் பிரிவு மாணவா்களுக்கு தலா ரூ.22 ஆயிரம் முதுநிலை மாணவா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் 44 மாணவா்களுக்கு ரூ.9.5 லட்சம் கல்வி ஊக்கத்தொகை காவலா் சேமநல நிதியிலிருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments