FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நமீதா, கணேஷ் வெங்கட்ராம் உட்பட 'பிக் பாஸ்' பங்கேற்பாளர்கள் லிஸ்ட்!

முதலில் 14 பேர்கள் மட்டுமே என்றிருந்த பங்கேற்பாளர்கள் லிஸ்ட் நமீதா வருகையின் பின் 15 ஆனது. இது கமலே அறியாத சஸ்பென்ஸ் என்கிறார்கள். 

Updated On : 26 ஜூன் 2017, 4:08 pm IST
பகிர்:

கமலின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் யார், யார் என்பது கடைசி வரை ரகசியமாகவே வைக்கப் பட்டிருந்தது. நேற்று பிக் பாஸின் முதல் எபிசோட் ஒளிபரப்பாகும் போது தான் தனக்கே யாரெல்லாம் பங்கேற்பாளர்கள் எனத் தெரியப் போகிறது என்று கமல் சொல்லிக் கொண்டார். அப்படி கமல் அறிமுகப் படுத்திய பிக் பாஸின் 14 இல்லை... இல்லை 15 பங்கேற்பாளர்கள் யாரெல்லாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  1. முதலில் வந்தவர் வழக்கு எண் 16 திரைப்படம் மூலம் அறிமுகமான ஸ்ரீ... அவரைத் தொடர்ந்து வந்தவர்
  2. சிவா மனசுல சக்தி திரைபப்டம் மூலமாக ஏராளமான ரசிக இதயங்களைக் கொள்ளை கொண்ட அனூயா...
  3. அனூயாவைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் வையாபுரி வந்தார்.
  4. வையாபுரியை அடுத்து நாடோடிகள் திரைப்படத்தின் ‘பரணி’...
  5. பரணியைத் தொடர்ந்து நடன இயக்குனர் காயத்ரி ரகுராம்,
  6. கவிஞர் சினேகன்,
  7. நகைச்சுவை நடிகையும், தொகுப்பாளினியுமான ஆர்த்தி,
  8. நடிகர் கணேஷ் வெங்கட் ராம்,
  9. நடிகர் கஞ்சா கருப்பு,
  10. ஜல்லிக்கட்டு வீரத் தமிழச்சி ஜூலியானா,
  11. அப்புறம் ரைஸா வில்சன் என்ற ஒரு மிஸ் இந்தியா மாடல்,
  12. களவாணி திரைப்படப் புகழ் ஓவியா,
  13. அரார் என்றொரு விளம்பர மாடல்,
  14. இயக்குனர் வாசுவின்  மகன் ஷக்தி வாசு,  
  15. கடைசியாக தி ஒன் அண்டு இன்லி நமீதா!

முதலில் 14 பேர்கள் மட்டுமே என்றிருந்த பங்கேற்பாளர்கள் லிஸ்ட் நமீதா வருகையின் பின் 15 ஆனது. இது கமலே அறியாத சஸ்பென்ஸ் என்கிறார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எனப் பிரத்யேகமாக தயாரான வீடு நேற்றைய எபிசோடில் காட்டப் பட்டது. அந்த வீட்டில் தான் இந்த 15 பங்கேற்பாளர்களும் நேற்றிலிருந்து அதாவது ஜூன் 25 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் தங்கி இருக்கப் போகிறார்கள்.  

Advertisement

Advertisement

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழந்தை கணத்தில் இருந்து பங்கேற்பாளர்களிடம் இருந்த தொடர்பு கொள்ளும் சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. தொலைக்காட்சி, அலைபேசி, லேப் டாப், வாட்ச், இண்டர்நெட் என எதன் மூலமாகவும் யாரையும் இனி அவர்கள் தொடர்பு கொள்ளக் கூடாது... முடியாது. போட்டிக்கான விதிகளில் மிக முக்கியமானது இது. அந்த வீட்டிற்குள்  குறைந்த பட்சம் செய்தித்தாள் கூட காண முடியாது. கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் அனைவரும் அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.  100 நாட்களுக்குமான ஒரே பொழுது போக்கு அங்கிருக்கும் நீச்சல் குளத்தில் நீந்துவதும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதும், சமைத்து சாப்பிடுவதுமாக மட்டுமே இருக்க முடியும். அதைத் தாண்டி இந்த 15 பேர்களும் ஒருவருக்கொருவர் ஒத்துப் போனால் நன்றாக அரட்டை அடிக்கலாம். இதைத் தாண்டி அவர்கள் செய்வதற்கு எதுவுமில்லை. இந்த 15 பிரபலங்களின் இந்த பிக் பாஸ் வாழ்க்கை பாத்ரூம் தவிர பிற எல்லாம் இடங்களிலுமே  கேமிராக்கள்  வழியாக கண்காணிக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். 

எவர் ஒருவரை கலந்து கொண்ட அனைவரும் சகித்துக் கொண்டு, குறை காண முடியாத நபராக இருக்கிறாரோ அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்றவராகக் கருதப் படுவார். என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை எதுவுமே எதிர் பாராததாகவே இருக்கப் போகிறது என்றார் கமல்.  தினமும் இரவு 9 மணிக்கும் சனி , ஞாயிறுகளில் மட்டும் இரவு 8.30 மணிக்கும் வித்யாசமான இந்த நிகழ்ச்சி அயல்நாடுகளிலும், வடக்கிலும் பிரபலமானது தான். தமிழுக்கு கொஞ்சம் புதுசு.

இதில் என்ன ஒரு ஆறுதல்? என்றால் கமலை தினமும் இனி ஸ்டார் விஜயில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காணலாம். அவரடிக்கும் கமெண்ட்டுகளைக் கேட்டுச் சிரிக்கலாம் என்பது தான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments