முகப்பு
செய்திகள்

பாரதிராஜாவுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்: அதிதி பாலன் 

தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைந்தார் அதிதி பாலன். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:

அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைய உள்ளார். இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மம்தா மோகன்தாஸ் நடிக்க வேண்டிய படத்தில் அதிதிபாலன் நடிக்கிறார். பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக அவர் நடிக்க வேண்டிய தேதி வீணாகி விட்டது. பின்னர் அவர் கால்சீட் கிடைக்காததால் அவருக்கு பதில் அதிதி பாலன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

இது குறித்து அதிதி பாலன் கூறியதாவது: 

சமீபத்தில் தங்கர் பச்சான் என்னை அணுகி ஒரு கதை கூறினார். கதையின் கரு மிகவும் எளிமையாக இருந்தது மிகவும் பிடித்தது. அசலான உணர்ச்சிகளை இந்தப் படம் பேசுகிறது. ஒரு மணிநேரம் அவரிடம் பேசினேன். நிறைய கற்றுக்கொண்டேன். 

என்னுடைய அதிகமான காட்சிகள் பாரதிராஜா சாருடன் இருக்கப் போகிறது. அவருடன் நடிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவருக்கும் உடல்நிலை சரியாக இல்லை. இபோதுதான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஆனால் நான் கண்டிப்பாக படப்பிடிப்பில் நிறைய கற்றுக் கொள்வேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.