FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இளையராஜாவுடன் ஒரே மேடையில் தோன்றும் வடிவேலு

இளையராஜா இசை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பாடல்களைப் பாடவிருக்கிறார்.

Updated On : 17 ஜூன் 2022, 4:33 pm IST
பகிர்:

இளையராஜா இசை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பாடல்களைப் பாடவிருக்கிறார்.

தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது இசை நிகழ்ச்சியானது சென்னை மற்றும் கோவையில் நடைபெற்றது. 

இரண்டு நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக மதுரையில் வருகிற ஜூன் 26 ஆம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் நடிகர் வடிவேலுவும் மேடையில் தோன்றி பாடல்கள் பாடவிருக்கிறார். 

Advertisement

Advertisement

இதற்கான ப்ரமோவில் வடிவேலு பேசியதாவது, நான் பிறந்த மதுரைக்கு இளையராஜா வருகிறார். இதனைக் கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக நான் கச்சேரிக்கு வருகிறேன் என்றேன். சிவனேனு தரையில் பாடிக்கொண்டிருந்த என்னை, திரையில் பாட வைத்தது அவர்தான். மேடையில் இளையராஜாவோடு உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்தார். 

நடிகர் வடிவேலு முதன்முறையாக இளையராஜா இசையில்தான் என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து எல்லாமே என் ராசாதான் படத்தில் எட்டனா இருந்தா பாடல், ராஜாவின் பார்வையிலே படத்தில் அம்மனிக்கி அடங்கி என முதல் 3 பாடல்களை இளையராஜா இசையில்தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments