நடிகராக அறிமுகமாகும் சிவாஜியின் மற்றொரு பேரன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு கதாநாயகன் உருவாகிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு கதாநாயகன் உருவாகிறார்.
சிவாஜி குடும்பத்தில் அவருடைய மகன்களான பிரபு, ராம்குமார் ஆகியோர் நடிகர்களாக உள்ளார்கள். பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவும் ராம்குமாரின் மகன்களான துஷ்யந்த், சிவாஜி தேவ் ஆகியோரும் திரையுலகில் நடிகர்களாக ஏற்கெனவே அறிமுகமான நிலையில் இன்னொரு வாரிசும் நடிகராகவுள்ளார்.
ராம்குமாரின் முதல் மகன் துஷ்யந்த், சக்சஸ், மச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மற்றொரு மகனான தர்சன் கணேசன் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். புணே நகரில் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ள தர்சன் - தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் தெருக்கூத்து நாடகங்களில் நடித்துள்ளார். தர்சன் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.