கலகத் தலைவன் திரைப்படத்தின் ‘ஹே புயலே’ பாடல் வெளியீடு
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவர் திரைப்படத்தின் ஹே புயலே பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவர் திரைப்படத்தின் ஹே புயலே பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன்.
இதையும் படிக்க | ’பிரின்ஸ் தோல்விக்கு அவர்தான் காரணம்..’: தயாரிப்பாளர்
Advertisement
Advertisement
இந்தத் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்துக்கு இசையமைக்கின்றனர்.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஹே புயலே பாடலை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். ஸ்ரேயா கோஷல், சத்ய பிரகாஷ் பாடியுள்ள இந்தப் பாடலை கார்க்கி எழுதியுள்ளார்.
இதையும் படிக்க | ’வாடகைத் தாய் முறை சரிதானா’? சமந்தா பதில்
இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.