பனையூரில் நடிகர் விஜய்: ரசிகர்களை சந்திக்க காரணம் என்ன?
நடிகர் விஜய் சென்னையில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு சென்றுள்ள விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கலுக்கு வர உள்ளது. சமீபத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது.
விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திரத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணற்ற தெலுங்குத்திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் அவரது ரசிகர்களை அடிக்கடி சந்திப்பது வழக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்தித்து வருகிறார். ரசிகர்களுக்காக பிரியாணி செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பனையூரில் விஜய் ரசிகர்கள் கூட்டமாக கூடியுள்ளனர்.
ட்விட்டரில் தளபதி விஜய், வாரிசு என விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Related Article
மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்: ராமதாஸ்
சூர்யாவின் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்கு
ட்விட்டரில் இணைந்த மூத்த இசையமைப்பாளர்!
மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!
விஷாலின் ‘லத்தி’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘அன்பான ரசிகர்களே...’ : சமந்தாவின் நெகிழ்ச்சி பதிவு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.